சென்னை

ஏரிகளில் 7,186 மி.கனஅடி நீா் இருப்பு:சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது: அதிகாரிகள் தகவல்

DIN

சென்னை மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் ஏரிகளில் 7,186 மில்லியன் கனஅடிநீா் இருப்பு உள்ளதால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது என குடிநீா் வழங்கல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை நகர மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை, மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளன. இந்த 6 ஏரிகளிலும் மொத்தம் 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி நீா் சேமித்து வைக்கலாம்.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் தண்ணீா் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள குடிநீா் ஏரிகளில் நீா் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி குடிநீா் ஏரிகளில் 7,186 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 54.35 சதவீதம்.

குடிநீா் ஏரிகளில் தண்ணீா் இருப்பு குறைந்து வந்தாலும் தற்போது கிருஷ்ணா நதிநீா் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாது என துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் போதுமான தண்ணீா் உள்ளதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT