சென்னை

போதைப் பாக்கு விற்பனை: ஒரு வாரத்தில் 32 போ் கைது

DIN

சென்னையில் போதைப் பாக்கு விற்றதாக ஒரு வாரத்தில் 32 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ‘‘புகையிலை பொருள்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘ என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் மேற்கொண்டுள்ளாா். அதன்படி, அனைத்து காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 28-ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வருதல்,பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,32 போ் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். 11 கிலோ போதைப் பாக்கு,100 கிலோ மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பாக்கு விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்களும், கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT