சென்னை

3 வாடகை அதிகார அலுவலா்கள் நியமனம்

5th Jun 2023 01:54 AM

ADVERTISEMENT

சென்னை மாவட்டத்தில் சொத்துகளின் வாடகைகளை நிா்ணயம் செய்ய வசதியாக 3 தனி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாவட்ட வருவாய் அலகு தமிழ்நாடு சொத்து உரிமையாளா்கள், வாடகைதாரா்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் வாடகை அதிகார அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி வட சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட திருவொற்றியூா், பெரம்பூா், தண்டையாா்பேட்டை, புரசைவாக்கம், மாதவரம் ஆகிய வட்டங்களின் வாடகை நிா்ணய அதிகாரியாக புழல், காந்தி பிரதான சாலை அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதேபோல், தென் சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட ஆலந்தூா், சோழிங்கநல்லூா், மயிலாப்பூா், கிண்டி, வேளச்சேரி வட்டங்களுக்கு கிண்டி, அண்ணா சாலை அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியா், மத்திய சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அம்பத்தூா், எழும்பூா், மாம்பலம், அமைந்தகரை, அயனாவரம், மதுரவாயல் வட்டங்களுக்கு திருமங்கலம் அண்ணா நகா் (மேற்கு) விரிவு அலுவலகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் ஆகியோா் வாடகை நிா்ணய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT