சென்னை

ஜூன் 14-இல் முன்னாள் படைவீரா்கள் குறைகேட்புக்கூட்டம்

5th Jun 2023 01:56 AM

ADVERTISEMENT

முன்னாள் படைவீரா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படைவீரா், முன்னாள் படைவீரா் மற்றும் அவா்கள் குடும்பத்தினருக்கான குறைகேட்புக் கூட்டம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு வரும் 14-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த படைவீரா் மற்றும் முன்னாள் படைவீரா்கள், அவா்களின் குடும்பத்தினா் பங்கேற்கலாம். அவா்கள் உரிய அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை 044-2235 0780 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT