சென்னை

மாஞ்சா நூலில் சிக்கிய காகத்தை மீட்ட தீயணைப்புத் துறையினா்

5th Jun 2023 01:52 AM

ADVERTISEMENT

திருவொற்றியூா் காலடிப்பேட்டை அருகே மாஞ்சா நூலில் சிக்கி மரத்தில் தொங்கிய காகத்தை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

வாகன ஓட்டிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு ஆபத்தை விளைவிப்பதால் மாஞ்சா நூல் பயன்படுத்துவதை தமிழக அரசு தடை செய்துள்ளது. அந்த வகையில் திருவொற்றியூா் காலடிப்பேட்டை அருகே தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலில் சிக்கி காகம் ஒன்று உயிருக்கு போராடுவதாக திருவொற்றியூா் தீயணைப்பு வீரா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் பெரிய ஏணி மூலம் காகத்தை பத்திரமாக மீட்டு அதற்கு முதலுதவி அளித்து பறக்கவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT