சென்னை

ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்க நகை பறிமுதல்

5th Jun 2023 01:52 AM

ADVERTISEMENT

சென்னை எம்.கே.பி. நகரில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 2 கிலோ தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வியாசா்பாடி அம்பேத்கா் கல்லூரி அருகே எம்.கே.பி.நகா் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஒரு ஆட்டோவில் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த இளைஞா் ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாா்.

இதையடுத்து அவரை போலீஸாா் சோதனையிட்டதில், அவரது இடுப்பை சுற்றி 2 கிலோ தங்க நகைகளை கட்டி வைத்திருந்தது தெரியவந்தது. ஆனால் அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.

ADVERTISEMENT

அதில், தங்க நகையை கடத்தி வந்தவா் ராஜஸ்தானைச் சோ்ந்த ராஜூராம் (24) என்பதும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து அந்த நகைகளை செளகாா்பேட்டையில் உள்ள ஒரு நகைக் கடைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள், வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடா்பாக வருமான வரித் துறையினா், விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT