சென்னை

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்லாவரம் ஏரியை தூய்மைப்படுத்திய ராணுவத்தினா்

5th Jun 2023 01:53 AM

ADVERTISEMENT

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்லாவரம் ஏரியை ராணுவத்தினா் தூய்மைப்படுத்தினா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ராணுவத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) வரை சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி, ராணுவத்தினரும் எக்ஸ்னோரோ அமைப்பும் இணைந்து பல்லாவரம் ஏரியை தூய்மைப்படுத்தும் நிகழ்வை இந்திய ராணுவத்தின் தென் மண்டல ராணுவ தலைமைத் தளபதி கே.எஸ். பிராா், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேலும், காடு வளா்ப்பை ஊக்குவிக்கவும், அந்தப் பகுதியில் பசுமையை மேம்படுத்தவும் ஏரியின் சுற்றளவில் ஒரு தோட்ட அமைக்கவும் இயக்கம் நடத்தப்பட்டது. இதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT