சென்னை

1.165 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

1st Jun 2023 02:20 AM

ADVERTISEMENT

துபையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துபையிலிருந்து செவ்வாய்கிழமை சென்னைக்கு விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரைப் பிடித்து சோதனையிட்டனா்.

அப்போது அவரிடம் இருந்த கணினி உதிரிபாகங்களில் 10 தங்க தகடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.63.7 லட்சம் மதிப்பிலான 1.165 கிலோ தங்கத்தை அந்த நபரிடம் இருந்து சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT