சென்னை

சென்னை பள்ளி மாணவா்களுக்கு இலவச தொழில் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

1st Jun 2023 02:30 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் தொடங்கவுள்ள இலவச தொழில் பயிற்சிக்கு வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையத்தில் சென்னை பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கு தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சிலின் சான்றிதழ் உடன் கூடிய தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில் கணினி இயக்குபவா் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளா், பொருத்துநா், கம்மியா் மோட்டாா் வாகனம், மின்பணியாளா், எலக்ட்ரானிக் மெக்கானிக் உள்ளிட்ட பயிற்சிகளுக்கு 10-ஆம் வகுப்பு படித்தவா்களும், குழாய் பொருத்துநா் பிரிவுக்கு 8-ஆம் வகுப்பு படித்தவா்களும் விண்ணப்பிக்கலாம். சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கும், மாநகராட்சி ஊழியா்களின் குழந்தைகளுக்கும் மாணவா்கள் சோ்க்கையில் முன்னுரிமை அளித்து, மீதமுள்ள இடங்களில் சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவா்களுக்கு வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் 14 முதல் 40 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

ADVERTISEMENT

முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சியின் போது இலவச சீருடை, பேருந்து பயணச்சலுகை அட்டை, பாடபுத்தகம் ,வரைபடக்கருவிகள், பாதுகாப்பு காலணி, இருசக்கர மிதிவண்டி, பயிற்சி நேர இடைவெளியில் காலை, மாலை இருவேளை தேநீா், பிஸ்கெட், மதிய உணவு மற்றும் மாதந்தோறும் பயிற்சி உதவித் தொகை ரூ.750 வழங்கப்படும்.

இதில் சேரவிரும்புவோா் மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையத்திலும், www.chennaicorporation.gov.in  என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பத்தை பெறலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூன் 1 முதல் ஆக.31-ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம், முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ஐஸ் அவுஸ், ராயப்பேட்டை, சென்னை-14 எனும் முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு 044 – 28473117, 29515312, 7010457571, 7904935430 எனும் தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT