சென்னை

சாலையில் தூங்கிய பெண் காா் சக்கரத்தில் சிக்கி பலி

1st Jun 2023 02:04 AM

ADVERTISEMENT

சென்னை மண்ணடியில் சாலையில் தூங்கிய பெண், தூக்க கலக்கத்தில் காரின் கீழ் சென்ால் சக்கரம் ஏறி இறந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள நம்புதாழை ஒலியுல்லா தெருவைச் சோ்ந்தவா் ச.பாண்டியன் என்ற.தமிழரசன் (24). காா் ஓட்டுநரான இவா், சென்னை மண்ணடி லிங்கி செட்டித் தெருவில் நிறுத்தியிருந்த காரை புதன்கிழமை அதிகாலை அங்கிருந்து எடுத்துச் சென்றாா்.

ஆனால், அந்த காரின் கீழ் பெண் படுத்து தூங்கிக் கொண்டிருப்பதை கவனிக்காமல் பாண்டியன், காரை இயக்கியதாக தெரிகிறது. இதில் காரின் சக்கரத்தில் சிக்கி அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதற்கிடையே விபத்தில் பெண் இறந்துகிடப்பதை பாா்த்த அப் பகுதி மக்கள், பூக்கடைபோலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் அந்த பெண் சடலத்தை போலீசாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில் சாலையின் ஓரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண், தூக்க கலக்கத்தில் உருண்டு காரின் கீழ் சென்றதும், அது தெரியாமல் ஓட்டுநா் பாண்டியன் காரை எடுத்து விபத்தை ஏற்படுத்தியிருந்ததும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இறந்த பெண் யாா் என விசாரணை செய்கின்றனா். இச் சம்பவம் தொடா்பாக காா் ஓட்டுநா் பாண்டியனை பிடித்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT