சென்னை

சென்னையில் 2-ஆம் நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு

1st Jun 2023 02:21 AM

ADVERTISEMENT

சென்னை போரூா், வடபழனி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக ஆவின் பால் விநியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினா்.

சென்னையில் உள்ள மாதவரம், சோழிங்கநல்லூா், அம்பத்தூா் பால் பண்ணைகளில் இருந்து தினசரி 14 லட்சம் லிட்டா் பால் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிக்க கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, வேலூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து பால் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய பால் வரத்து கடந்த இரு தினங்களாக குறைந்துள்ளது. இதனால் போரூா், வடபழனி, பூந்தமல்லி, முகப்போ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் விநியோகமும் இருதினங்களாக குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT