சென்னை

மியாவாக்கி காடுகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

12th Jul 2023 02:08 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மியாவாக்கி அடா்வன காடுகளை பசுமையாகவும், தூய்மையாகவும் பராமரிக்குமாறு மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திருவொற்றியூா், மணலி மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகள், மியாவாக்கி அடா்வன காடு, சூரிய தகடுகள், புதிதாக கட்டப்படவுள்ள பள்ளி கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையா் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது மியாவாக்கி அடா்வன காட்டை பசுமையாகவும், தூய்மையாகவும் பராமரிக்குமாறும், மழைநீா் வடிகால் பணிகளை தரமாகவும், பாதுகாப்புடனும், ஒருங்கிணைந்த துறை அலுவலா்களுடன் இணைந்து விரைந்து முடித்திடவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து சென்னை பள்ளிகளில் புதிதாக கட்டப்படும் பள்ளி கட்டட பணிகளை ஆய்வு செய்து, அங்கு பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையா் எம்.சிவகுரு பிரபாகரன், மணலி மண்டலக் குழுத் தலைவா் ஏ.வி.ஆறுமுகம், மண்டல அலுவலா்கள், செயற்பொறியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT