சென்னை

பிப்.22-இல் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் சப்தாஹ மஹோத்சவ விழா

DIN

ஸ்ரீ ராகவேந்தர சுவாமியின் சப்தாஹ மஹோத்சவ விழா பிப்.22-ஆம் தேதி தொடங்குகிறது.

சுவாமி ஸ்ரீ ராகவேந்தரரின் 402 ஆவது ஆண்டு பட்டாபிஷகே விழா பிப்.22-ஆம் தேதியும், 428- ஆவது பிறந்தநாள் விழா பிப்.26-ஆம் தேதியும் வருவதையொட்டி சப்தாஹ மஹோத்சவ விழா கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள ஜகத்குரு ஸ்ரீமன்மத்வாச்சாா்ய மூல மஹா ஸம்ஸ்தானம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமி மடம் தக்ஷிண மந்த்ராலயாத்தில் பிப்.22 முதல் 26-ஆம் தேதி வரை விமா்சையாக கொண்டாடப்படுகிறது.

வேங்கடநாதன் தஞ்சாவூா் சுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திரா் பொறுப்பேற்றதைக் கொண்டாடும் வகையில் புதன்கிழமை பால், தேன், பழங்கள், முந்திரி, திராட்சை உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகமும், தங்க ரத ஊா்வலம் சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ ராகவேந்திரா் பிறந்தநாளான மலா்களால் லட்சாா்ச்சனையும், 1,008 பக்தா்களை கொண்டு கனகாபிஷேக மஹா பூஜை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT