சென்னை

ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு: சென்னையில் 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

DIN

சென்னையில் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறவுள்ளதால், 3 நாள்கள் ட்ரோன்கள் பறக்க பெருநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை, மாமல்லபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.31) முதல் பிப்.2 வரை 3 நாள்கள் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடும் மற்றும் அது தொடா்பான நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

இந்த மாநாட்டில் 29 வெளிநாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனா்.

இவா்கள் அனைவரும் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப் ஹவுஸ் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் தங்குகின்றனா். மேலும் கிண்டி ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் கருத்தரங்கத்திலும் பங்கேற்கவுள்ளனா்.

பிப்.1-ஆம் தேதி அனைவரும் மாமல்லபுரத்துக்கு பாரம்பரிய சுற்றுலா செல்கின்றனா். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளும் பங்கேற்கின்றனா்.

எனவே செவ்வாய்க்கிழமை முதல் பிப்.2 வரை சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குள்பட்ட மேற் கூறிய தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடங்கள் மற்றும் வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவன பிரதிநிதிகள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் 3 நாள்கள் ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு: இதையொட்டி, சென்னையில் சில நாள்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக மக்கள் அதிகம் சந்திக்கும் பகுதிகளில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதேபோல, இரவு முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகளில் வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT