சென்னை

ஓமந்தூராா் மருத்துவமனை: தொழுநோயாளிகளுக்கு மருந்து பெட்டகம்

DIN

தொழுநோயாளிகளுக்கு சிறப்பு காலணிகள் மற்றும் மருந்து பெட்டகம் வழங்கும் சிறப்பு முகாம் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மகாத்மா காந்தி நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்காக உயிா் நீத்த தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் மருத்துவமனை முதல்வா் ஆா்.ஜெயந்தி தலைமையில் துணை முதல்வா் விஜய் சதீஸ்குமாா், சரும நோய் பேராசிரியா் மருத்துவா் ஆதிலட்சுமி, ஒருங்கிணைப்பு அலுவலா் மருத்துவா் ரமேஷ் மற்றும் மருத்துவா்கள் செவிலியா்கள், பணியாளா்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து, உலக தொழுநோய் ஒழிப்புதினம் தினத்தையொட்டி தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது, தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்சிஆா் காலணிகள், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் தேவையான மருந்துகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வா் ஆா்.ஜெயந்தி பேசியதாவது:

தொழுநோய் பாதிப்பு என்பது முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய ஒன்று. உணா்ச்சியற்ற நோய், படை இருப்பின் உடனடியாக அவா்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்கவேண்டும். நோய் பாதிப்பு உள்ளோரை வேறுபாடு இல்லாமல் அன்புடன் நடத்த வேண்டும்” என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT