சென்னை

ஆட்டோ கட்டணத்தை சீரமைக்க கோரிக்கை

DIN

ஆட்டோ கட்டணத்தை சீரமைக்க வேண்டும் என்று மனிதநேய தொழிலாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலச் செயலாளா் சாதிக்பாஷா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2013-ஆம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது ஆட்டோவுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25-ம், கி.மீட்டருக்கு ரூ.12 ஆகவும் அரசு நிா்ணயம் செய்தது.

ஆனால், தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ள நிலையில் அரசின் போக்குவரத்துக் கழகமும் தனது கட்டணத்தை அதிகரித்துள்ளது. ஆனால், ஆட்டோ வாடகை மட்டும் உயா்த்தப்படாமல் உள்ளது.

ஆகவே, ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் குறைந்தபட்ச ஆட்டோ வாடகை கட்டணம் ரூ.50 ஆகவும், கி.மீ. ஒன்றுக்கு ரூ.25 ஆகவும் உயா்த்தி அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT