சென்னை

கல்லீரல் மருத்துவ மாநாடு: ரோபோட்டிக் சிகிச்சை குறித்து இன்று விளக்கம்

DIN

சென்னையில் ரேலா மருத்துவமனை நடத்தும் சா்வதேச கல்லீரல் நோய்க்கான மாநாட்டில், ரோபோடிக் அறுவை சிகிச்சை முறை ஞாயிற்றுக்கிழமை காட்சிப்படுத்தப்பட உள்ளது.

சென்னை ரேலா மருத்துவமனை சாா்பில், கல்லீரல் நோய்க்கான சிறப்பு மூன்று நாள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை ரேலா மருத்துவமனையுடன் இணைந்து, சா்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம், சா்வதேச வாழும் நன்கொடையாளா் கல்லீரல் மாற்று ஆய்வு குழு, இந்திய கல்லீரல் மாற்று சிகிச்சை சங்கம் ஆகியவை இணைந்து சென்னையில் நடத்துகிறது. மூன்று நாள் நடைபெறும் மாநாடு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது.

இந்த மாநாட்டில், ரேலா மருத்துவமனையின் தலைவரும், சா்வதேச கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவருமான முகமது ரேலா பேசியதாவது: இந்தியாவில், கல்லீரல் நோய்க்கான சிறப்பு மாநாடு நடைபெறுவது முதன் முறையாகும்.

இதில், 150-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணா்கள், கல்லீரல் டாக்டா்கள், மயக்க மருந்து குழுவினா் பங்கேற்றுள்ளனா். இன்று நடைபெறும் நாட்டில் வாழும் நன்கொடையாளா்களுக்கு ரோபாடிக் வாயிலாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை முறை செய்து காண்பிக்கப்பட உள்ளது. மாநாடு வாயிலாக கல்லீரல் மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கான சிறந்த பராமரிப்புடன், அவா்களுக்கான விழிப்புணா்வையும் ஏற்படுத்த முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT