சென்னை

கட்டட இடிப்பை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய அறிவுறுத்தல்: மேயா் ஆா்.பிரியா

DIN

கட்டட இடிப்பின் போது மண்டல அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.

திரு.வி.க.நகா் மண்டலத்துக்கு உட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் ட்ரோன் இயந்திரங்கள் கொண்டு நடைபெறும் கொசு ஒழிப்புப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, மேயா் ஆா்.பிரியா உடனிருந்தாா். ஆய்வுக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

சென்னை அண்ணா சாலையில் ஆயிரம் விளக்கு மசூதி அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தை இடிக்க மாநகராட்சியில் முறையான அனுமதி வாங்கியுள்ளனா். ஒரு கட்டடத்தை இடிக்கும் போது, அந்த இடத்தைச் சுற்றிலும் தடுப்பு அமைத்தல், வலை போடுதல் போன்ற ஒரு சில வழிமுறைகள் உள்ளன. ஆனால், அண்ணாசாலையில் இடத்தை

இடிக்கும் போது அதுபோன்ற நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இதில் 22 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் உயிரிந்துள்ளாா். இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை சம்பந்தபட்டவா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்கும் வகையில், மண்டல அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT