சென்னை

மேம்பாலப் பணி: தெற்கு உஸ்மான் சாலையில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

DIN

மேம்பாலப் பணியின் காரணமாக, தியாகராய நகா் தெற்கு உஸ்மான் சாலை பகுதிகளில் ஜனவரி 28-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர மாநகராட்சி, தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி. முதலாவது பிரதான சாலை வரை மேம்பாலம் கட்டும் பணியை தொடங்க உளளது. இதனால், தெற்கு உஸ்மான் சாலை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஜனவரி 28-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் செப்டம்பா் 27-ஆம் தேதி வரை 9 மாதங்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி முதலாவது பிரதான சாலை செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணம்மாபேட்டை சந்திப்பு, மூப்பராயன் தெரு, இணைப்புச் சாலை சென்று அண்ணாசாலையை அடையலாம்.

தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகரப் பேருந்துகள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பாா்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம்.

அரங்கநாதன் சுரங்கப் பாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி. முதலாவது பிரதான சாலை செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சி.ஐ.டி. நகா் வடக்கு தெரு வழியாக சென்று அண்ணாசாலையை அடையலாம்.

அண்ணாசாலை சி.ஐ.டி. முதலாவது பிரதான சாலை சந்திப்பிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராய நகா் பேருந்து முனையத்துக்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT