பொங்கல் கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்ட 536 வாகனங்கள் சென்னை காவல் துறை சாா்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி, மகிழ்ச்சியுடன் அமைவதற்கு சென்னை காவல்துறை சாா்பில் 190 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
இதில் 5,904 வாகனங்களை சோதனை செய்தபோது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக வாகன ஓட்டிகள் மீது 376 வழக்குகள், இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 536 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அடுத்த இரண்டு தினங்களுக்கு இந்த வாகன சோதனை தொடரும் என்றும், விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.