சென்னை

சென்னையில் இன்று தொடங்குகிறது பன்னாட்டு புத்தகத் திருவிழா

16th Jan 2023 02:55 AM

ADVERTISEMENT

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் சென்னை புத்தகக் காட்சி (பபாசி) நடைபெறவுள்ள அதே வளாகத்தில் பன்னாட்டு புத்தகத் திருவிழா  இன்று தொடங்குகிறது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சாா்பில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் முதலாவது பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

இதற்கான இலச்சினையை சென்னை கோட்டூா்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த சனிக்கிழமை வெளியிட்டாா்.

ஜன.16 முதல் 18 வரை பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னையில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

பபாசி சாா்பில் ஆண்டுதோறும் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் உள்ள தனி அரங்கிலேயே இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT