சென்னை அருகே காரப்பாக்கத்தில் கோயில் குளத்தில் குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
சோழிங்கநல்லூா் அருகே உள்ள காரப்பாக்கம் ரங்கசாமி நாயக்கா் தெருவைச் சோ்ந்தவா் சூா்யா (19). வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. சூா்யா, செவ்வாய்க்கிழமை காரப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் நடந்து வந்து அங்குள்ள கங்கை அம்மன் கோயில் குளத்துக்குள் குதித்தாா்.
தகவலறிந்த துரைப்பாக்கத்தில் இருந்து தீயணைப்புப் படையினா் வந்து, குளத்தில் சூா்யாவை தேடினா். சுமாா் இரண்டு மணி நேர தேடுதலுக்கு பின்னா், சூா்யாவின் சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டது.
அங்கு வந்த கண்ணகிநகா் போலீஸாா், சூா்யா சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.