கம்பர் கவி இன்பம் (இரண்டு தொகுதிகள்), ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (அரங்கு 525), விலை ரூ.1,000, முதல் தொகுதி 608, இரண்டாம் தொகுதி 528 பக்கங்கள் கொண்டது. தமிழறிஞர் ரா.பி.சேது பிள்ளை 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல் தொகுதியில் 141 தலைப்புகளிலும், இரண்டாம் தொகுதியில் 103 தலைப்புகளிலும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கெனவே ராஜபாளையம் கம்பன் கழகத்தின் சார்பில் இத்தொகுதிகள் வெளியிடப்பட்ட நிலையில் தமிழறிஞர் ரா.பி.சேது பிள்ளை படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பின்னர் புதிய பதிப்பாக இத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
"ஆற்றின் அழகு' என்ற தலைப்பில் கம்பர் எவ்வாறெல்லாம் ஆற்றின் அழகை தமது கவித்திறத்தால் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை மூலப்பாடலுடன், படிப்போர் ரசிக்கும் வகையில் விளக்கவுரை அளித்துள்ளார் நூலாசிரியர். "நாட்டின் நலன்' எனும் தலைப்பிலான கட்டுரையில், அயோத்தி மன்னரும், மக்களும் எப்படி அறம் பிறழாது வாழ்ந்தனர் என்பதை வியக்கும் வகையில் கம்பர் பாடலுடன் காட்சிப்படுத்தியுள்ளார். தமிழின்பத்தைப் பருக நினைக்கும் இலக்கிய
வாசகர்கள் அனைவரும் இந்த நூலை எக்காலமும் தங்கள் இல்லத்தில் பத்திரப்படுத்தி வைக்கும் வகையில் வெளியிடப்பட்டதாகக்
கூறுகிறார் செண்பகா பதிப்பக உரிமையாளர் ஆர்.எஸ்.சண்முகம்.