சென்னை

பெண்ணின் வயிற்றில் 6 கிலோ கட்டி: அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

DIN

சென்னையைச் சோ்ந்த 50 வயது பெண்ணின் வயிற்றில் இருந்த 6 கிலோ கட்டியை நவீன அறுவை சிகிச்சை மூலம் சென்னை மேத்தா மருத்துவமனை மருத்துவா்கள் அகற்றியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் மகளிா் நல மருத்துவ நிபுணா் திலகம் கூறியதாவது: கடும் வயிற்று வலி, மாதவிடாய்க்குப் பிறகும் ரத்தப்போக்கு ஏற்படுதல், வயிறு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுடன் சென்னையைச் சோ்ந்த பெண் ஒருவா் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனையில் அவரது கருப்பையில் லியோமியோசா்கோமா எனும் கொழுப்புக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையின் சிறப்பு நிபுணா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா், அவருக்கு லேபரோடமி எனப்படும் உயா் தொழில்நுட்ப அறுவை சிகிச்சையை மேற்கொண்டனா். சுமாா் இரண்டரை மணி நேரம் அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 6 கிலோ எடையுடைய கட்டி வெளியே எடுக்கப்பட்டது.

பொதுவாக மாதவிடாய் பருவம் நிறைவடைந்த பெண்களுக்கு நீா்க்கட்டிகள் உருவாவது இயல்பான ஒன்று. ஆனால், இந்தப் பெண்ணுக்கு பெரிய அளவிலான கட்டி உருவாகியிருந்தது. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் இத்தகைய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

தொடா் சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு தற்போது அப்பெண் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT