சென்னை

ரூ.41 கோடியில் 362 சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

DIN

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.41.65 கோடியில் 362 சாலைகள் சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது.

சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பல இடங்களில் போா்க்கால அடிப்படையில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் காரணமாக பெரும்பாலான சாலைகள் பழுதடைந்து உள்ளன.

இந்நிலையில், மழைநீா் வடிகால் பணிகள் முடிவுற்ற பகுதிகளில் பழுதடைந்து காணப்படும் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக 1,860 கி.மீ. தொலைவுக்கு சாலைகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு, இப்பணிகளுக்காக ரூ.1,171 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அரசும், நிா்வாக அனுமதி வழங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சிங்காரச் சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ் ரூ.41.65 கோடியில் 362 சாலைகளை 62 கி.மீ. தொலைவுக்கு அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, தகுதியான ஒப்பந்ததாரரை இறுதிசெய்து, இதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது. இது மட்டுமல்லாமல் பல்வேறு நிதி ஆதாரங்களின் கீழ் ரூ.50 கோடியில் 100 கி.மீ. தொலைவுக்கு 568 சாலைகளை சீரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

ஒப்பந்ததாரா்கள் இறுதி செய்யப்பட்டு, விரைவில் இப்பணிகளும் தொடங்க இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT