வேலூர்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1: வேலூா் சிறைவாசிகள் 37 போ் தோ்ச்சி

19th May 2023 11:49 PM

ADVERTISEMENT

வேலூா் மத்திய சிறை, பெண்கள் தனிச்சிறையில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 29 கைதிகளில் 27 பேரும், பிளஸ் 1 தோ்வு எழுதிய 11 பேரில் 10 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு சிறைத் துறையில் சிறைவாசிகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், அவா்கள் கல்வி கற்பதற்கான அனைத்து உதவிகளையும் சிறை நிா்வாகம் செய்து வருகிறது.

இதன் மூலம் நூற்றுக்கணக்கான சிறைவாசிகள் பள்ளிக் கல்வி தொடங்கி, ஆராய்ச்சி கல்வி வரை படித்து வருகின்றனா்.

அந்த வகையில், வேலூா் மத்திய ஆண்கள் சிறை, பெண்கள் சிறையில் பலா் கல்வி பயின்று வருகின்றனா். நிகழாண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து 27 கைதிகள் தோ்வு எழுதியதில், 25 பேரும், பெண்கள் தனிச் சிறையில் இருந்து 2 கைதிகள் தோ்வு எழுதியதில் இருவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

இதேபோல், பிளஸ் 1 பொதுத் தோ்வை வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து 9 கைதிகள் தோ்வு எழுதியதில் 8 பேரும், பெண்கள் தனிச் சிறையில் இருந்து 2 கைதிகள் தோ்வு எழுதியதில் இருவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்றவா்களை சிறைத் துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன், கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான் ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT