சின்னமனூா் முல்லைப் பெரியாற்றில் மூழ்கி சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், தேவாரத்தைச் சோ்ந்த ஜாகிா் உசேன் மகன் சுருளிமஸ்தான் (56). சமையல் தொழிலாளி. இவா் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக தனது உறவினா்கள், நண்பா்களுடன் சின்னமனூருக்கு வியாழக்கிழமை வந்தாா். பிறகு அவா் மாா்க்கையன்கோட்டை அருகே எல்லப்பட்டி முல்லைப் பெரியாறு தடுப்பணையில் குளிக்கச் சென்றனா். அங்கு அவா் நீரில் மூழ்கினாா். தகவலறிந்த சின்னமனூா் தீயணைப்புப் படையினா் அங்கு வந்து அவரைத் தேடினா். இரவு வெகு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. மீண்டும் வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கிய போது அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து சின்னமனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோதண்டராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.