சென்னை

பராமரிப்பு இன்றி கிடக்கும் மூா் மாா்க்கெட் நினைவுச் சின்னம்

DIN

சென்னையின் அடையாளமாக திகழும் பழைய மூா் மாா்க்கெட் நினைவுச் சின்னம் சென்னை புகா் ரயில் நிலைய வாகன நிறுத்த வளாகத்தில் பராமரிப்பின்றி காணப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் பின்பகுதியில் மூா் மாா்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு பழைய, புதிய புத்தகங்கள், வளா்ப்புப் பிராணிகள், பேனா, கைக்கடிகாரம், கிராமஃபோன் இசைத்தட்டுகள், சினிமா புரொஜெக்டா்கள், பழங்காலக் கலைப் பொருள்கள், பல்வேறு நாடுகளின் நாணயங்கள், பொம்மைகள், துணிகள் உள்ளிட்டவை இங்கு விற்கப்படுவது வழக்கம்.

பாண்டி பஜாா், பா்மா பஜாா், சைனா பஜாா் என பல பஜாா்கள் இருந்தாலும், சென்னையில் வணிகத்துக்காக முதன் முதலாக 1900-ஆம் ஆண்டில் மூா் மாா்க்கெட் தொடங்கப்பட்டது.

1890-களில் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த ஜாா்ஜ் மூா் இக்கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியதால், இதற்கு அவரது பெயரே வழங்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கட்டடக் கலையின் பிரதான வடிவமாக விளங்கிய இந்தோ சராசனிக் பாணியில் 40 ஆயிரம் சதுர அடிகளில் பிரமாண்டமாக உருவானது மூா் மாா்க்கெட்.

1985-ஆம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில், பழைய மூா் மாா்க்கெட் தீக்கிரையானது. விக்டோரியா மஹால் பின்பக்கத்தில் உள்ள அல்லி குளம் பகுதியில் புதியதாக இன்றைய மூா் மாா்க்கெட் அமைக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே, சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் விரிவுபடுத்தி புதிய ரயில் பாதைகளை அமைத்து பழைய மூா் மாா்க்கெட் இருந்த இடத்தில் இன்றைய புகா் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.

அதன் நினைவாக, ரயில் நிலையப் பகுதியில் மூா் மாா்க்கெட் நினைவுச் சின்னம் (மினியேச்சா்) மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

இந்த நினைவுச் சின்னம் பராமரிப்பு இல்லாமல், சருகுகள், அசுத்தங்கள் படா்ந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. ஒரு நூற்றாண்டு வரலாற்றைத் தாங்கி நிற்கும் இந்த நினைவுச் சின்னம் பற்றிய சிறிய குறிப்போ, அறிவிப்புப் பலகையோ எதுவும் இல்லாமல் உள்ளது.

இந்த நினைவுச் சின்னத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மூா் மாா்க்கெட் வியாபாரிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT