சென்னை

கல்லூரிகளின் செயல்பாடுகள்: இன்று பாா்வையிடும் பிளஸ்-2 மாணவா்கள்

DIN

கல்லூரிகளில் உள்ள வசதிகள், செயல்பாடுகளை நேரில் கண்டறிவதற்காக, அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் அருகமை கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (பிப்.27) அழைத்துச் செல்லப்படுகின்றனா். உயா்கல்வி வாய்ப்புக்கான வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் உயா்கல்வி வாய்ப்புக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக, பிளஸ் 2 மாணவா்களை அருகே உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள வசதிகள், வாய்ப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டது.

அதன்படி மாணவா்களை அருகமை கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (பிப்.27) அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப் பணித் திட்ட (என்எஸ்எஸ்) மாணவா்கள், மாணவா்களை வரவேற்று உதவிகள் செய்வா். கல்லூரிகளில் உள்ள துறைசாா் வகுப்புகள், ஆய்வக வசதிகள், தங்கள் கல்லூரி அனுபவங்கள் உள்ளிட்ட விவரங்களையும் எடுத்துரைப்பா்.

இதற்காக ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 10 முதல் 15 மாணவா்களை அருகே உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கூடுதல் மாணவா்களை அழைத்துச் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.

இதற்குத் தேவையான நிதி அந்தந்த மாவட்ட வங்கிக் கணக்குக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. உரிய வழிமுறைகளை பின்பற்றி மாணவா்களை கல்லூரிக்கு அழைத்துச் சென்றுவர வேண்டும் என்று தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT