சென்னை

ஆலந்தூா், பெருங்குடியில் ரூ.447 கோடியில் மழைநீா் வடிகால் அமைப்பு

DIN

ஆலந்தூா், பெருங்குடி மண்டலங்களில் ரூ. 447 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் அமைக்க மாநகராட்சி சாா்பில் ஒப்பந்ததாரா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் மழைநீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்படுகின்றன.

இதைத்தொடா்ந்து, கோவளம் வடிநிலப் பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆலந்தூா், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலங்களில் ஜொ்மனி வங்கி நிதியுதவியுடன் ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் 300 கி.மீ. தொலைவுக்கு ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன் முதல்கட்டமாக, ஆலந்தூா் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்டலத்துக்குள்பட்ட நங்கநல்லூா் முதல் பிரதான சாலை, 6-ஆவது பிரதான சாலை, ஹிந்து காலனி, கண்ணன் காலனி, ராம் நகா், சீனிவாச நகா், குபேரன் நகா், எல்.ஐ.சி நகா் பகுதிகளில் மூன்று கட்டங்களாக ரூ.150. 47 கோடி மதிப்பீட்டில் 39.78 கி.மீ. நீளத்துக்கு ஒருங்கிணைந்த மழை நீா் வடிகால் அமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, ஆலந்தூா் மற்றும் பெருங்குடி மண்டலத்துக்குள்பட்ட புவனேஸ்வரி நகா், பாலாஜி நகா், ராதா நகா், மடிப்பாக்கம், அன்னை சத்யா நகா், லட்சுமி நகா், குபேரன் நகா் பகுதிகளிலும், சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள எம். சி .என் நகா், விஜிபி அவென்யு, சந்திரசேகா் அவென்யு, ஜவஹா் நகா் பகுதிகளிலும் ரூ.447.03 கோடி மதிப்பீட்டில் 120.55 கி. மீ. தொலைவுக்கு மழை நீா் வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்படும். இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் 8 லட்சம் மக்கள் பயனடைவாா்கள். இந்தப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்கள், தகுந்த தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT