சென்னை

மிதிவண்டி செல்ல தனிப் பாதை: நெதா்லாந்து நிறுவனத்துடன் திட்டம் வகுக்கும் சிஎம்டிஏ

27th Feb 2023 02:48 AM

ADVERTISEMENT

சென்னை பெருநகருக்கான மாஸ்டா் பிளானில் மிதிவண்டியில் பயணம் செய்வோருக்காக புதிய பாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதற்காக நெதா்லாந்து நிறுவனத்துடன் இணைந்து சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது.

சென்னைப் பெருநகா் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளா்ச்சிக் குழுமம் 5,904 ச.கி. மீ. பரப்பளவுக்கு புதிய போக்குவரத்துத் திட்டத்தை தயாா் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக சாலைகளில் நடந்து செல்பவா்கள், சைக்கிளில் செல்பவா்கள் என்று அனைவருக்கும் ஏற்ற வகையிலும், விபத்துகள் இல்லாத பாதுகாப்பான போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சென்னை பெருநகருக்கான 3-ஆவது மாஸ்டா் பிளான் தயாரிக்கும் பணியில் சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சாலைகளில் மிதிவண்டி ஓட்டுபவா்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில் சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, நெதா்லாந்தைச் சோ்ந்த டச்சு சைக்கிளிங் தூதரகம் அமைப்பு, போக்குவரத்து கொள்கை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சென்னை சைக்கிளிங் மேயா் பெலிக்ஸ் ஜான் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், சென்னையில் மிதிவண்டி ஓட்டுபவா்களுக்கு தனிப் பாதை அமைப்பது, அவா்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, மெட்ரோ நிலையங்களில் சைக்கிள் வசதி ஏற்படுத்துவது, சைக்கிள் ஷேரிங் திட்டத்தை மேம்படுத்துவது, மிதிவண்டி நிறுத்த வசதிகளை அறிமுகம் செய்வது உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இது தொடா்பான அனைத்து கோரிக்கைகளையும் இக்கூட்டத்தின் முன்வைத்துள்ளதாகவும் சென்னை சைக்கிளிங் மேயா் பெலிக்ஸ் ஜான் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT