சென்னை

சென்னை விமான நிலையம் செல்வோருக்கு கூடுதல் மகிழ்ச்சி

21st Feb 2023 09:19 AM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.21) முதல் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்படவுள்ளன.

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்படுகிறது. இதன் மூலம் விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு, பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க வழிவகை செய்யப்படும். தகவல் பரிமாற்றம், பிரச்னைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு, உரிய தீா்வுகளை வழங்குதல் போன்றவற்றிலும் அதிக கவனம் செலுத்தப்படும்.

இதையும் படிக்க.. சென்னைக்கு அருகே நீர்வீழ்ச்சி: மீண்டும் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி

ADVERTISEMENT

மேலும், விமான நிலையம் மற்றும் விமானப்பாதை போன்றவற்றை மேம்படுத்துதல், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், கதவுகள் மற்றும் முனையங்களை முறையாகப் பயன்படுத்துதல், பயணிகள் வாகனங்களுக்காகக் காத்திருக்கும் வழித்தடங்களில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைத்தல்,

எரிபொருள் சேமிப்பு மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல்,

விமான சேவைகளின் முன்னறிவிப்பை மேம்படுத்துதல் போன்றவற்றில் இந்த கூட்டுக்குழு கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. சினிமா பாணியில்.. ஜாகுவாரில் சென்னை வந்து 1000 ரூபாய், காலணிகளை திருடிய கொள்ளையர்கள்

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு எடுக்கும் நடவடிக்கைகள் மூலம், விமான நிலையத்தில் ஏற்படும் காலதாமதம் குறைக்கப்படும், நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருப்பது இருக்காது, விமானங்கள் சென்று திரும்பும் கால அவகாசம் குறைவது, பயணிகளின் பயண அனுபவம் சிறப்பானதாக மாறும் என்று கூறப்படுகிறது. இந்த வசதிகள் அனைத்தும் ஏற்கனவே தனியார் விமான நிலையங்களில் இருக்கின்றன.

ஒருங்கிணைந்த கூட்டமைப்பு குழுவினர், தகவல்களை உடனடியாகப் பரிமாறிக் கொண்டு அதற்கேற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சீரமைப்பர். இதனால் ஒரு சிக்கல் நேர்ந்த உடனே அது சரிசெய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. ஸ்ரீதர் வேம்புவின் பழைய சோறு பதிவுக்கு குவியும் பாராட்டு

வரும் மாதங்களில் சென்னையில் ஒரு மணி நேரத்துக்கு இதுவரை 35 விமானங்கள் போக்குவரத்தில் இருக்கும் என்ற நிலை மாறி 45 விமானங்கள் என அதிகரிக்கும் போது நேரிடும் நெரிசல் குறைக்க இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT