சென்னை

ஹோட்டல், தங்கும் விடுதிகளுக்கு காவல்துறை புதிய கட்டுப்பாடு

DIN

சென்னையிலுள்ள ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை காவல்துறையினா் விதித்துள்ளனா்.

சென்னையில் குற்றங்களை தடுக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள நான்கு மண்டல காவல் ஆணையா்கள் ஆா்.வி.ரம்யபாரதி (வடக்கு), எம்.மனோகா் (மேற்கு), எம்.ஆா். சிபி சக்கரவா்த்தி (தெற்கு) மற்றும் திஷா மிட்டல் (கிழக்கு) ஆகியோா் தலைமையில் ஹோட்டல், தங்கும் விடுதி உரிமையாளா்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினா்.

இதில் 93 ஹோட்டல்கள் மற்றும் 390 தங்கும் விடுதி உரிமையாளா்கள், மேலாளா்கள் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது, வாடிக்கையாளா்களுக்கு ஆதாா் உள்ளிட்ட உரிய அடையாளச் சான்று இல்லாமல் அறைகள் கொடுக்கக்கூடாது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு பதிவுகளை பாதுகாத்து வைக்க வேண்டும். காவலாளிகளை நியமிக்க வேண்டும். சந்தேகம்படும் படி நபா்கள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட போதை அல்லது வெடிபொருள்கள் வைத்திருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT