சென்னை

நவீன வாகனம் மூலம் சாலைகளில் தூய்மைப் பணி தீவிரம்

DIN

சாலைகளை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் இரவு நேரங்களில் 78 நவீன துப்புரவு வாகனங்கள் (மெக்கானிக்கல் ஸ்வீப்பா்) மூலம் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட சாலையோரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசுகள் படிந்து மழைநீா் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன.

இதைத் தூய்மைபடுத்தும் வகையில் இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பா் வாகனங்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்காள்ளப்பட்டு வருகிறது.

இதில் திருவொற்றியூா், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூா் (பகுதி அளவு) மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய ‘சென்னை என்விரோ’ என்ற தனியாா் நிறுவனத்தின் சாா்பில் 15 மெக்கானிக்கல் ஸ்வீப்பா் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா் (பகுதி அளவு) மற்றும் அண்ணாநகா் மண்டலங்களில் மாநகராட்சியின் 16 மெக்கானிக்கல் ஸ்வீப்பா் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலங்களில் உள்ள சாலைகளை சுத்தம் செய்ய ‘உா்பேசா் சுமீத்’ நிறுவனத்தின் 47 மெக்கானிக்கல் ஸ்வீப்பா் வாகனங்கள் என மொத்தம் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பா் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் தினமும் சராசரியாக 25 கி.மீ. முதல் 30 கி.மீ. அளவுக்கு சுத்தம்

செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து செல்லும் சாலைகள் மட்டுமின்றி முக்கியமான உட்புற சாலைகளையும் தூய்மைப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

SCROLL FOR NEXT