சென்னை

5 ஆண்டுகளில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்பு!

DIN

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
சென்னையில் முதன்மைச் செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் தலைமையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பேசிய அவர், கொத்தடிமை முறையிலிருந்து  விடுவிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உடனடி மறு வாழ்வு நிவாரண தொகையாக ரூ.30,000/- மற்றும்  குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், வீட்டுமனை, பட்டா, வேலைவாய்ப்பு கல்வி,  தொழிற்திறன் பயிற்சி,  சுய உதவி குழுக்களில் உறுப்பினராக சேர்த்தல் மற்றும் மருத்துவ வசதிகள்  ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

2021-ன்படி கொத்தடிமைத் தொழிலாளர் முறை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஆண் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும்,  சிறப்பு பிரிவு பயனாளிகள் அதாவது பிச்சை எடுக்கும் தொழிலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைகள், அனாதை குழந்தைகள், கட்டாய குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு ரூ.2 லட்சமும், திருநங்கைகள்,  ஆள் கடத்தல் மற்றும்  பாலியல் வன் கொடுமைகளில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள்  ஆகியோருக்கு ரூ. 3 லட்சமும்  மறுவாழ்வு நிவாரணத் தொகையாக வழங்குவதற்கு  வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறையின் சீரிய முயற்சியால், 2017 ஏப்ரல் முதல் 2022 டிசம்பர் வரை 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டு அவர்களுக்கு விடுதலை சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ரூ.3,03,73,000 நிவாரணமாக வழங்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கொத்தடிமைத் தொழிலாளர்களை பணியமர்த்துவோர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹே சினாமிகா.. அதிதி ராவ்!

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

பைங்கிளி.. ஷ்ரத்தா தாஸ்!

சேல‌ம்: வெ‌ள்ளி நக​ரி‌ன் மகு​ட‌ம் யாரு‌க்கு?

SCROLL FOR NEXT