சென்னை

'தேவி விருதுகள்' விழா தொடக்கம்

8th Feb 2023 06:15 PM

ADVERTISEMENT

 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் 'தேவி விருதுகள்' வழங்கும் விழா சென்னையில்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண் சாதனையாளர்களைத் தேர்வு செய்து தேவி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 11 பெண் ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விழாவில் புதுச்சேரி  முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்குகிறார்.

ADVERTISEMENT

சென்னையில் கடந்த 2018ஆம் ஆண்டு தேவி விருதுகள் விழா நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக சென்னையில் இந்த விழா நடைபெறுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT