சென்னை

சென்னை நகரின் நீர் சேமிப்பு திறனை அதிகரிக்க திட்டம் இருக்கிறது: ஆனால் நிதி?

8th Feb 2023 12:21 PM

ADVERTISEMENTசென்னை: சென்னை பெருநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நகரின் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்தி, நீர் சேமிப்புத்திறனை அதிகரிப்பதற்காக பல்வேறு பரிந்துரைகளை நீர்வளத்துறை சமர்ப்பித்தாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக திட்டங்கள் தாமதமாகின்றன.

கூடுதலாக 20.50 ஆயிரம் மில்லியன் கனஅடி நீரை சேமிக்கும் வகையில், சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும். இதற்காக ரூ.22,004 கோடியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க.. இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி

இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் இருக்கும் ஆறு நீர்த்தேக்கங்களின் ஒட்டுமொத்த நீர் இருப்பு அளவு 13.2 டிஎம்சி. ஆனால், சென்னையின் ஒட்டுமொத்த நீர்த்தேவை என்பது 22 டிஎம்சி.

ADVERTISEMENT

இதற்கிடையே, மாநில அரசு கணித்திருப்பதன்படி, மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, அடுத்த 10 ஆண்டுகளில்  ஆண்டுதோறும் நீர்த்தேவை அதிகரித்து 32 டிஎம்சியாக இருக்கும். எனவே, நீர்வளத்துறை, ஆய்வுகளை நடத்தி, சின்ன சின்ன நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி நீர் சேமிப்புத் திறனை அதிகரிக்கும் திட்டங்களை வகுத்துள்ளது.

இதையும் படிக்க.. மூன்று மகிழ்ச்சியான செய்திகளை பகிர்ந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஓராண்டுக்கு முன்பே, இது தொடர்பான ஆய்வறிக்கைகைள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்படாததால், திட்டங்கள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் நிதிநிலை அறிக்கையில் ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. பெற்றோரே.. கூடுகள் காலியாகும் நோயை எதிர்கொள்வோம்!

இதன் மூலம், சென்னையின் குடிநீர் தேவைக்கும் இருப்புக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT