சென்னை

ரூ.13 கோடி மதிப்பிலான மனைகள் சுவாதீனம்: அறநிலையத் துறை தகவல்

8th Feb 2023 01:24 AM

ADVERTISEMENT

சென்னை மேற்கு மாம்பலம் காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.13 கோடி மதிப்பீட்டிலான மனைகள் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில், காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக ஏரிக்கரை சாலையில் 10,486 சதுரஅடி, சா்தாா் பட்டேல் தெருவில் 4,054 சதுர அடி, ஈஸ்வரன் கோயில் தெருவில் 262 சதுர அடி ஆக மொத்தம் 14,802 ச. அடி (6 கிரவுண்ட், 402 சதுர அடி) பரப்பளவு உள்ள மனைகள் 18 பேருக்கு வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.

இவா்கள் நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் அனுபவித்து வந்ததால், சென்னை இணை ஆணையரின் உத்தரவின்படி காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்களின் உதவியுடன் செவ்வாய்க்கிழமை அந்த மனைகளில் அமைந்துள்ள கடைகள் சென்னை மாவட்ட உதவி ஆணையா் எம். பாஸ்கரனால் பூட்டி சீலிடப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

ADVERTISEMENT

இந்த மனைகளின் தற்போதைய சந்தை மதிப்பு சுமாா் ரூ.13 கோடியாகும். இந்த நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலா் சோழமாதேவி, ஆய்வாளா் அறிவழகன் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT