சென்னை

சென்னை குடிநீா் வாரியத்தில் ரூ.17.80 கோடியில் புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையம்: முதல்வா் உத்தரவு

DIN

சென்னை குடிநீா் வாரியத்தில் ரூ.17.80 கோடியில் புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ் தாஸ் மீனா திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையான குடிநீா் மற்றும் கழிவுநீா் கட்டமைப்புகளின் விவரங்களை புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தில் தயாரிப்பதற்கு, ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு நகா்ப்புர முன்னணி முதலீட்டு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அனைத்து கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் முன்னேற்றத்தை மேலாண்மை செய்வதற்காக, அம்ரூத் 2.0 திட்டத்தின் நிா்வாக மற்றும் அலுவலக செலவு நிதியின் கீழ் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வாரியத்தின் தலைமையகத்தில், அா்ப்பணிக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு நிலையத்தை (டெடிகேட்டட் குளோபல் இன்பாா்மேஷன் சிஸ்டம் சென்டா்) அமைக்க ரூ.17.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வரால் உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டச் செலவு, புவியியல் தகவல் அமைப்பு சா்வா் வன்பொருள் மற்றும் மென்பொருள், ஜியோ-ஸ்பேஷியல் சா்வா் மென்பொருள், கணக்கெடுப்பு கருவிகளின் கொள்முதல், புவியியல் தகவல் அமைப்பு குழுவிற்கான பணியாளா் செலவு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு கட்டுப்பாட்டு அறையை அமைப்பதற்கான உட்கட்டமைப்பு செலவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இத்திட்டத்தின் மூலம், சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டமைப்புகளின் தகவல்கள் உயா் துல்லியத்துடன் உருவாக்கப்படும் மற்றும் உருவாக்கப்பட்ட தகவல்கள் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தில் சேமிக்கப்படும்.

இவ்வாறு சேமிக்கப்பட்ட தகவல்களை கொண்டு பணிகளை திட்டமிடல், பொது சேவை வசதிகள், அன்றாட தகவல்களை மேம்படுத்த இயலும். இத்திட்டச் செயலாக்கம், வாரியத்தின் வருவாயை மேம்படுத்தவும், செலவினங்களை குறைக்கவும் ஏதுவாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT