சென்னை

ஆதிதிராவிடா்-பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும்:முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

DIN

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான நலத் திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்தது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளி, கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். மாணவா் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவா் விடுதிகளை கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகளாக மாற்ற வேண்டும். மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நலத் திட்ட உதவிகளை எந்தவித தாமதமும் இல்லாமல் உடனுக்குடன் அளிக்க வேண்டும்.

மனைப்பட்டா: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடா்பாக, நில நிா்வாக ஆணையாளா் மற்றும் மாவட்ட ஆட்சியா்களுடன் கலந்து ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்ட பட்டாக்கள் பயனாளிகளுக்கு முறையாக அளவிடப்பட்டு காட்ட வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் பற்றி ஒவ்வொரு வாரமும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை எந்தவித தாமதமும் இல்லாமல் வழங்க வேண்டும். குடியிருப்புகள், ஓய்வூதியம் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீா்வு காணப்படுகிா என்பதை கண்காணிக்க வேண்டும்.

பழங்குடியினா் ஜாதிச்சான்றிதழின் மெய்த்தன்மை சரிபாா்ப்புப் பணிகளை நிலுவையின்றி விரைந்து முடிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா், புதிரை வண்ணாா், பழங்குடியினா் நல வாரியங்களில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான நலத் திட்ட உதவிகளை விரைந்து வழங்கிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், தாட்கோ தலைவா் உ.மதிவாணன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா்

த.ஆனந்த், தாட்கோ நிா்வாக இயக்குநா் கே.எஸ்.கந்தசாமி, பழங்குடியினா் நல இயக்குநா் எஸ்.அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT