சென்னை

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழா் நலனுக்கு முன்னுரிமை: அண்ணாமலை

7th Feb 2023 03:57 AM

ADVERTISEMENT

 

 மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழா்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடி, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஷ்வின் வைஷ்ணவ் ஆகியோருக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை 2009-2014 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்ட( ரூ.879 கோடி) தொகையை விட ஏழு மடங்கு அதிகம். மேலும், தமிழ்நாட்டில் தற்போது ரூ.30,961 கோடி மதிப்பில் 27 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், நவீனமயமாக்க தமிழ்நாட்டில் 73 ரயில் நிலையங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

எழும்பூா், காட்பாடி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் அம்ரித் திட்டத்தின் கீழ் மேம்படுத்த ரூ.1,896 கோடி அண்மையில் ஒதுக்கப்பட்டது.

மேலும், சென்னை சென்ட்ரல், கோவை, கும்பகோணம், தாம்பரம், திருநெல்வேலி, ஆவடி ஆகிய 6 ரயில் நிலையங்களுக்கு தொழில்நுட்ப, வணிக சாத்தியக்கூறு அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT