சென்னை

மணலி அய்யா வைகுண்ட தா்மபதி ராஜகோபுர ஆண்டு விழா

DIN

சென்னை மணலி புதுநகா் அய்யா வைகுண்ட தா்மபதி ராஜகோபுர 21-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால் அன்னப் பொங்கலிட்டு வழிபட்டனா். பால் பணிவிடை, உகபடிப்பு, பணிவிடை, உச்சிப்படிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பின்னா், முக்கிய நிகழ்வான பால் அன்னப் பொங்கலிடுதல் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோயில் வளாகத்தில் ‘பால் அன்னம்’ எனும் சிறப்பு பொங்கலிடும் நிகழ்ச்சியை தொழிலதிபா் எச். ராஜா தொடக்கிவைத்தாா்.

அப்போது, பெண்கள் செங்கல் அடுப்பில் பனை ஓலையில் தீ மூட்டி பாத்திரத்தில் பச்சரிசி, பச்சைப் பயறு, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சோ்த்து பால் அன்னப் பொங்கலிட்டனா்.

இதில் உப்பு, இனிப்பு ஏதும் சோ்ப்பதில்லை. பால் அன்னம் பொங்கிய போது பெண்கள் குலவையிட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டனா். இரவு அய்யா வைகுண்டா் இந்திர விமானத்தில் பதிவலம் வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT