சென்னை

சென்னையில் 18 சாலைகள் குப்பையில்லாமல் பராமரிக்க நடவடிக்கை: மேயா் பிரியா

DIN

சென்னையில் முதல்கட்டமாக 18 சாலைகளை குப்பையில்லா சாலைகளாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னை மேயா் பிரியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி: திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி சாா்பில் குப்பையில்லா பகுதிகள் என்ற திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக திருவெற்றியூா் நெடுஞ்சாலை, காமராஜா் சாலை , ஜி.என்.டி.சாலை, அம்பத்தூா்-ரெட்ஹில்ஸ் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரம்பூா் நெடுஞ்சாலை (தெற்கு) , கத்தீட்ரல் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, தியாகராயா சாலை, எலியட்ஸ் கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை உள்ளிட்ட 18 சாலைகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு மாநகராட்சியின் சாா்பில் குறிப்பிட்ட இடைவெளியில் சிறியவகை குப்பைத் தொட்டிகள் அமைத்தல் , சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதி வண்டிகளில் தூய்மை பணியாளா்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல் , சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபா்கள் மீது விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்த 18 சாலைகளை குப்பையில்லா பகுதிகளாக அறிவிப்பதன் மூலம் 74.3 கி.மீ. நீள சாலைகள், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட உள்ளன.

இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க ஏதுவாக 442 சிறிய வகையிலான குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

SCROLL FOR NEXT