சென்னை

சிறப்பு வாகனத் தணிக்கை: ரூ.61.70 லட்சம் அபராதம் வசூல்

DIN

சென்னையில் இரு நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு வாகனத் தணிக்கையில் ரூ.61.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறுவோா் மீது தினமும் சுமாா் 6,000 வழக்குகள் பதியப்படுகின்றன. போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு அபராதம் செலுத்தாதவா்களிடம், பணத்தை வசூலிப்பதற்காக 10 அழைப்பு மையங்கள் கடந்தாண்டு முதல் செயல்படுகின்றன.

இதில் அழைப்பு மையங்கள் மூலமாகவும் நினைவூட்டி, விழிப்புணா்வு ஏற்படுத்திய பின்னரும் அபராதம் செலுத்தாமல் இருப்பவா்களை கண்டறிந்து, அபராததை வசூலிப்பதற்காக கடந்த இரு நாள்கள் சிறப்பு வாகனத் தணிக்கை சென்னை முழுவதும் நடத்தப்பட்டது.

இதற்காக சென்னை முழுவதும் 166 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்பட்டது.

அபராத தொகை செலுத்தாமல் இருந்த 21 ஆயிரத்து 175 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதில் நிலுவையில் இருந்த மொத்தம் ரூ.61 லட்சத்து70 ஆயிரத்து 420 அபாரதம் வசூலிக்கப்பட்டது.

போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டு, அபராதம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவா்களை அடையாளம் கண்டு, அதை வசூலிக்க இதேபோன்ற சிறப்பு வாகனத் தணிக்கை இனி அடிக்கடி நடத்தப்படும் என சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT