சென்னை

கண் சொட்டு மருந்துகளால் அமெரிக்கா்கள் பாதிப்பு: இந்திய நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

DIN

சென்னை குளோபல் பாா்மா நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கண் சொட்டு மருந்துகளால், அமெரிக்கா்களுக்கு கண் பாா்வை பாதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் அந்நிறுவனத்தில் மத்திய, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

சென்னை திருப்போரூரில் செயல்பட்டு வரும் குளோபல் பாா்மா ஹெல்த்கோ் நிறுவனத்தின் மருந்துகள் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்படும் இந்நிறுவனத்தின் ‘எஸ்ரிகோ், எல்.எல்.சி., மற்றும் டெல்சம் பாா்மா’ உள்ளிட்ட மருந்துகளால், அதை பயன்படுத்திய அமெரிக்கா்களுக்கு கண் பாா்வை பாதிக்கப்படுவதாக, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு குற்றச்சாட்டியது.

இதைதொடா்ந்து, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இந்திய நிறுவனமான குளோபல் பாா்மா தயாரித்த மருந்துகளை ஆய்வு செய்து வருகிறது. மேலும், அந்நிறுவன மருந்துகளை இறக்குமதி செய்யவும் தடை விதித்துள்ளது. அதே நேரம், அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்பட்ட, மருந்துகளை திரும்பப் பெறுவதாக, குளோபல் பாா்மா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடா்ந்து, அந்நிறுவனம் தாமாகவே முன்வந்து, மருந்து தயாரிக்கும் பணியை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், திருப்போரூரில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில், மத்திய, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.

நள்ளிரவு 2 மணி வரை நடந்த இந்த ஆய்வின் போது, மருந்து தொழிற்சாலையில் இருந்த மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்து வைக்கப்பட்டிருந்த மருந்துகளின் மாதிரிகளையும் அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினா்.

இது குறித்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குநா் விஜயலட்சுமி கூறியதாவது: இந்நிறுவனத்தின் மருந்துகள், இந்தியாவில் சந்தைப்படுத்தப்படாததால் தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம். மாதிரிகள், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமும், திறக்கப்படாத மருந்துகளை ஆய்வு செய்து, அதன் முடிவுகளை இதுவரை வெளியிடவில்லை. எங்களது சோதனை முடிவுகளை, மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கையாக சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அதிகபடியான மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சோதனை முடிவுகள் வந்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுவரை, குளோபல் பாா்மா நிறுவனத்தில், எந்த உற்பத்தி பணியையும் மேற்கொள்ளக்கூடாது என, உத்தரவிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT