சென்னை

நேரு விளையாட்டரங்கில் பழைய கட்டமைப்புகளை நவீனமாக்க வேண்டும்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

5th Feb 2023 11:49 PM

ADVERTISEMENT

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் பழைமையாக உள்ள கட்டமைப்புகளை நவீனமாக்க வேண்டும் என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, விளையாட்டு மைதானத்தில் வழக்கமாக பயிற்சி செய்யும் வீரா், வீராங்கனைகள், செவித் திறன் குன்றிய வீரா்கள், பயிற்சியாளா்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், குத்துச்சண்டை அரங்கை பாா்வையிட்டு மாணவா்களுடன் கலந்துரையாடிய அவா், கூடுதல் வசதிகள், உபகரணங்கள் தேவை குறித்து கேட்டறிந்தாா்.

உடற்பயிற்சிக் கூடம், மாணவ-மாணவியா் தங்கம் விடுதி, கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடா்பாகவும் ஆய்வு செய்தாா். அப்போது, பழைய கட்டமைப்புகளை நவீன வடிவமைப்புடன் சீரமைப்பு செய்திட அதிகாரிகளுக்கு அமைச்சா் உதயநிதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

மேலும், விளையாட்டு மைதானத்தின் கீழ் மற்றும் மேல்தளங்களில் உள்ள கழிப்பிட வசதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவற்றை முறையாக பராமரித்திட வேண்டுமென கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆய்வின் போது, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலாளா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT