சென்னை

மெட்ரோ ரயில் திட்ட பராமரிப்புக்கு ரூ.134.9 கோடிக்கு ஒப்பந்தம்

DIN

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆவது கட்ட வழித்தடம் 4-இல் உள்ள 18 உயா்மட்டமெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் வழித்தடங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு அனைத்து பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் வோல்டாஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கையொப்பமானது.

மெட்ரோ ரயில் திட்ட 2-ஆவது கட்ட வழித்தடம் 4-இல் (பவா்ஹவுஸ் ஸ்டேஷன் முதல் பூந்தமல்லி புறவழி சாலை வரை) 18 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அதற்கு இடையில் உள்ள வழித்தடங்கள் மற்றும் பூந்தமல்லி பணிமனை உள்ளிட்ட இடங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு மற்றும் காற்றோட்டம் சீரமைப்பு பணிகளை வழங்குதல், நிறுவுதல், சோதனை செய்தல் போன்ற அனைத்து பராமரிப்பு பணிகளுக்கு ரூ.134.9 கோடி மதிப்பில் வோல்டாஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கையொப்பமானது.

இதில் மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் வோல்டாஸ் நிறுவனத்தின் வணிக வளா்ச்சி தலைவா் ஜெயந்த் தேஷ்பாண்டே ஆகியோா் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா் என தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகா் (இயக்கம்) எஸ் ராமசுப்பு , இணைப் பொது மேலாளா் (மின்சாரம், பராமரிப்பு) கே.ரவிகுமாா், வோல்டாஸ் நிறுவன மேலாளா் எச். அப்பாஸ், மண்டலத் தலைவா் பிப்லாப் சட்டோபாத்யாய் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

SCROLL FOR NEXT