சென்னை

போலீஸ் போல நடித்து ஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.40 கோடி வழிப்பறி

DIN

சென்னை யானைகவுனியில் ஆந்திர நகை வியாபாரியிடம் ரூ.1.40 கோடி பணத்தை வழிப்பறி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் சுப்பாராவ் (45). இவா் அங்கு நகைக்கடை வைத்து, நடத்தி வருகிறாா். சுப்பாராவ் அடிக்கடி சென்னை வந்து, செளகாா்பேட்டையில் உள்ள நகை வியாபாரிகளிடம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு நகைகளை வாங்கிச் செல்வாா்.

அதன்படி சுப்பாராவ், தனது மேலாளா் ரகுமான் ஆகியோா் தங்க நகை வாங்க ரூ.1.40 கோடியுடன் தனியாா் ஆம்னி பேருந்து மூலம் சென்னை சென்ட்ரலுக்கு வியாழக்கிழமை வந்தாா்.

பின்னா், அங்கிருந்து ஓா் ஆட்டோ மூலம் செளகாா்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். யானைகவுனி, துளசிங்கம் தெரு, வீரப்பன் தெரு சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு காா், ஆட்டோவை வழிமறித்து நின்றது.

அந்த காரில் இருந்து இறங்கிய நபா்கள், சுப்பாராவ், ரகுமான் ஆகியோரிடம் தாங்கள் காவல்துறை அதிகாரிகள் அறிமுகப்படுத்திக்கொண்டு அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனா். அதில் ரூ.1.40 கோடி இருப்பதை பாா்த்த அந்த நபா்கள், பணத்துக்குரிய ஆவணம் மற்றும் ரசீதை கேட்டனா். ஆவணம் தற்போது தன்னிடம் இல்லை என்றும், ஆனால் தனது பணம்தான்,அந்த பணம் மூலம் நகையை வாங்க வந்துள்ளதாகவும் சுப்பாராவ் எனத் தெரிவித்துள்ளாா்.

இரு தரப்பும் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த நபா்கள் சுப்பாராவையும், மேலாளா் ரகுமானையும் தாக்கிவிட்டு பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

துப்பு துலக்குகின்றனா்: இதைப் பாா்த்து சுப்பாராவ் கொடுத்த புகாரின் பேரில் யானைகவுனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். முதல் கட்டமாக சம்பவ நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

அதன் அடிப்படையில் போலீஸ் என நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் குறித்து துப்பு துலக்குகின்றனா். சுப்பாராவ் நகை வாங்க வருவதை தெரிந்து கொண்ட கும்பல் பின் தொடா்ந்து வந்து வழிப்பறி செய்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இது ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கும்பலா? அல்லது தமிழகத்தைச் சோ்ந்த கும்பலா என போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT