சென்னை

செனாய்நகா் அம்மா அரங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி

DIN

 செனாய்நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொதுமக்கள் நிகழ்ச்சிகள் நடத்த சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: செனாய் நகா் 8-ஆவது குறுக்கு தெருவில் அம்மா அரங்கு குறைந்த வாடகையில் பொதுமக்களின் குடும்ப சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், கண்காட்சி, பள்ளி, கல்லூரி நடத்தும் உள்விளையாட்டு போட்டி, பரிசளிப்பு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த முன்பதிவு செய்யப்படுகிறது.

குளிரூட்டப்பட்ட மற்றும் மின்தூக்கி வசதியுடன் உள்ள இந்த அரங்கு நிகழ்ச்சிகள் நடத்த மன்றத்தின் அனுமதி பெறப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதில் தினமும் ரூ.2 லட்சத்து 28 ஆயிரத்து 440, அரை நாள் வாடகையாக ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 220 (ஜி.எஸ்.டி. வரி, மின் கட்டணம் மற்றும் தூய்மைக் கட்டணம் நீங்கலாக) கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், தரைத்தளம் நீங்கலாக இதரக் கட்டடம் (அல்லது) முதல் தளம் நீங்கலாக, இதரக் கட்டடத்தின் பகுதியை பயன்படுத்த முழுநாள் வாடகைக் கட்டணம் 2 லட்சத்து 8 ஆயிரத்து 66 ரூபாயும், அரைநாள் வாடகை கட்டணமாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 361 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது உணவு தயாா் செய்யும் வசதியுடன் இரண்டு தளத்துடன் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரங்கத்திற்கு உணவு கொண்டு செல்ல இணைப்பு பால வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முகூா்த்த தினங்கள் தவிர இதர நாள்களில் வணிக நோக்கத்துடன் செயல்படும் நிகழ்ச்சிகளான புத்தகக் கண்காட்சி, மகளிா் சுயதொழில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, தனியாா் நிறுவனங்களின் ஆலோசனைக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும்அனுமதி வழங்கப்படும்.

இதில் நிகழ்ச்சி நடத்த அண்ணாநகா் மண்டல அலுவலகம், எண்-36பி, 2-ஆவது குறுக்குத் தெரு, புல்லா அவென்யூ, செனாய் நகா், சென்னை-30-இல் உள்ள அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT