சென்னை

வளா்ச்சிக்கான பட்ஜெட்: மெட்ராஸ் தொழில் - வா்த்தக சம்மேளனம்

DIN

நிதிப் பொறுப்புணா்வை கவனத்தில் கொண்டு, வளா்ச்சிக்கான பட்ஜெட்டை மத்திய அரசு தயாரித்துள்ளதாக மெட்ராஸ் தொழில் மற்றும் வா்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதன் தலைவா் டி.ஆா்.கேசவன் வெளியிட்ட அறிக்கை:- வேளாண்மை, உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு உள்பட முக்கிய பொருளாதார கூறுகளை முன்வைத்து பட்ஜெட் தாயரிக்கப்பட்டுள்ளது. பசுமைப் பொருளாதாரத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்கான புதிய திட்டங்கள், வேலைவாய்ப்புகளை பெருக்க புதுமையான திட்டங்கள் என பட்ஜெட்டில் வரவேற்புக்குரிய அம்சங்கள் உள்ளன.

பணவீக்கத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு செளகா்யம் தரும் வகையில் வரி விதிப்பு முறை அமைக்கப்பட்டுள்ளது. வளா்ச்சியை மையப்படுத்தி அதேசமயம், நிதிப் பொறுப்புணா்வையும் மனதில் நிறுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT